தொப்பையை சட்டென கரைக்கும் 3 மேஜிக் பானங்கள்! இப்படி எடுத்து கொண்டாலே போதும்
பொதுவாக நம்மில் பெரும்பாலோர் உடல் எடையை குறைக்கவும் தொப்பையை குறைக்கவும் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றார்கள்.
யோகா உடற்பயிற்சி முதல், எடை இழப்பீற்கான டயட் வரை பலவற்றை கடைபிடிக்கின்றனர்.
ஆனால், சில சமயங்களில் நமது முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. உடல் எடையை வேகமாகக் குறைக்கும் சில அற்புதமான பானங்கள் உள்ளன.
இவற்றை எடுத்து கொள்வதனாலும் நல்ல பயன் விரைவில் கிடைக்கின்றன. தற்போது அவற்றை பார்ப்போம்.
மசாலா மோர்
மசாலா மோர் கலோரிகள் மிகவும் குறைவு, வயிற்றை குளிர்வித்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனை தினமும் குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு கரைய ஆரம்பிக்கும்
மோரில் அதில் வறுத்து பொடித்த ஜீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்தால் அதை போல் எடையை குறைக்கும் மேஜிக் பானம் இல்லை எனலாம்.
சப்ஜா விதைகள் கலந்த தண்ணீர்
[MBOPGD ]
தொப்பை கொழுப்பை வேகமாக கரைக்க விரும்பினால், சப்ஜா விதைகளை உட்கொள்வது உங்களுக்கு விரும்பிய பலனைத் தரும்.
சப்ஜா விதையை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுப்பதில்லை, எடையும் குறைய ஆரம்பிக்கும்.
எலுமிச்சை கலந்த சூடான நீர்
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், தொப்பையை வேகமாக குறைக்கலாம்.
உடலில் நீர்ச்சத்து குறைவில்லாமல் இருப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்கள் விரைவில் வெளியேறும். இந்த பானம் மூலம் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இது உடல் எடையை குறைய ஒரு முக்கிய காரணம்.