முகத்தில் மருக்களால் தொல்லையா? எளியமுறையில் விரட்ட சில வழிகள் இதோ
Skin Care
By Kishanthini
பொதுவாக நம்மில் பலருக்கு முகத்தில் அங்காங்கே முகத்தில் மருக்கள் காணப்படும்.
இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இவை நமது முகத்தின் அடையாளமாகவே மாறத் தொடங்குகின்றன. இவற்றினால் பல சமயம் நாம் நமது நம்பிக்கையையும் இழக்கிறோம்.
எனினும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் மரு பிரச்சனைக்கு எளிதாக தீர்வு காணலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.
- ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயில் ஒரு ஸ்பூன் சோடாவை கலந்து, மருக்கள் உள்ள இடத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் சுத்தம் செய்யுங்கள். இப்படி பல நாட்கள் செய்து வந்தால் மருக்கள் மறையும்.
- அன்னாசி பழச்சாற்றை பஞ்சு கொண்டு மருவின் மீது தடவி அதன் மீது ஒரு துணி கொண்டு கட்டவும். சில மணி நேரம் கழித்து அதை அகற்றி தண்ணீரில் கழுவவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால், மருக்கள் தானே மறைந்துவிடும்.
-
ஒரு வெங்காயத்தை நன்றாக பேஸ்ட் செய்து மருக்கள் உள்ள இடத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து அதை தண்ணீரில் கழுவவும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்யவும். நீங்கள் விரும்பினால், வெங்காய விழுதில் வினிகர் அல்லது உப்பு சேர்க்கலாம்.
-
மருக்களை நீக்க வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு வாழைப்பழத் தோலைத் தடவி ஒரு துணியால் கட்டவும். சிறிது நேரம் கழித்து வாழைப்பழத் தோலை அகற்றவும். இதை தொடர்ந்து செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து மருக்கள் உதிர்ந்து காணப்படும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US