நிரந்தரமாக கருவளையத்தை நீக்க உதவும் வீட்டு வைத்தியம்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
சில பெண்களுக்கு கண்ணை சுற்றி கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையத்தை நிரந்தரமாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஐஸ் கட்டி- 2
- காபி தூள்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் முகத்தை நன்கு கழுவி கருவளையம் இருக்கும் பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து 5 நிமிடம் மசாஜ் செய்யவும்.
பின் ஒரு கிண்ணத்தில் காபி தூள், தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளவும்.

கருவளையம் உள்ள பகுதியில் இந்த கலவையை பூசி, அரை மணி நேரம் விட்டுவிட்டு குளிர்ந்த நீரால் கண்ணை கழுவவும்.
இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர கருவளையம் நிரந்தரமாக நீங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |