கருவளையத்தை நிரந்தரமாக நீக்க உதவும் இயற்கை தீர்வு.., எப்படி தயாரிப்பது?
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையங்கள் பெரும்பாலும் தூக்கமின்மை, மன அழுத்தம், நீரிழப்பு, பரம்பரை காரணங்கள் அல்லது அதிக திரை நேரத்தால் ஏற்படுகின்றன.
அந்தவகையில், கருவளையத்தை நிரந்தரமாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின் இவற்றை கண்களுக்கு கீழே தடவி 20 நிமிடம் அப்படியே வைக்கவும்.

அடுத்து இவற்றை குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளலாம்.
இந்த கலவையை தொடர்ந்து தினமும் கண்களுக்கு கீழே பயன்படுத்தி வந்தால் கருவளையம் நிரந்தரமாக நீங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |