இந்த 3 இலை இருந்தால் போதும்... நீரிழிவு நோய் சர்ருனு குறைந்திடும்
உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதயம், இரத்த அழுத்தம், சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகளையும் இழக்க நேரிடுகிறார்கள்.
இந்த நோயானது வாழ்க்கை முறை தொடர்பான நோயாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதே நீரிழிவு நோயாகும்.
தினசரி வாழ்க்கை முறையை மாற்றினால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். அதோடு ஒரு சில மருத்துவ குணங்கள் மூலமாகவும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம் என அறியப்பட்டுள்ளது.
அந்தவகையில் எவ்வகையான இலைகளை இதற்காக பயன்படுத்தலாம் என இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
கற்றாழை இலைகள்
கற்றாழையானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தாவரமாகும். இதில் ஹைப்போகிளேசமிக் பண்பு காணப்படுகிறது. அது இரத்தத்தில் இரக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. எனவே காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை இலைகளை சாப்பிடுவது சிறந்தது.
சீதாப்பழ இலைகள்
சீதாப்பழம் அதிக மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இந்த மரத்தில் உள்ள இலைகள் நீரிழிவு எதிர்த்து போராடும். சீதா இலைகள் சாப்பிட்டால் இன்சுலின் அளவை அதிகரிக்கும். எனவே உடலில் இரத்த சர்க்கரை அளவானது குறையும்.
வேப்பிலை இலைகள்
மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது வேப்பிலையாக தான் இருக்கும். இதில் பொதுவாகவே பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக காணப்படுகிறது. எனவே காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |