ஒரே வாரத்தில் முழங்கால் வரை முடி வளர கறிவேப்பிலையுடன் இந்த ஒரு பொருள் போதும்
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான். ஆனால் பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களின் பயன்படுத்த வேண்டும்.
ஒரே வாரத்தில் கூந்தல் முழங்கால் வரை வளர கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் போதுமானது.
கூந்தலுக்கு கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய்
கறிவேப்பிலையில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இவை உச்சந்தலையில் தேங்கியுள்ள அழுக்கு மற்றும் பொடுகை விரட்ட உதவும்.
மேலும், கறிவேப்பிலையில் உள்ள அதிகரளவு புரோட்டீன்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கூந்தலுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது.
கறிவேப்பிலை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின்பி, நரை முடியை கருப்பாக மாற்ற உதவும்.
நெல்லிக்காயில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் கூந்தலுக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதனை பயன்படுத்தினால் முடி உதிர்தல் மற்றும் பொடுகு பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இதன் பிறகு 1 கப் கறிவேப்பிலை, நெல்லிக்காயை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
விரும்பினால், அதில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த வெந்தயத்தையும் சேர்க்கலாம்.
இப்போது இந்த பேஸ்ட்டை கூந்தலில் நன்கு தடவி சுமார் 1-2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
இதை வாரம் 1 முதல் 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளரத் தொடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |