வறண்ட முடி பிரச்சனையா?.. பட்டு போன்ற மென்மையான கூந்தலுக்கு எளிய 4 வீட்டு வைத்தியங்கள் இதோ
உணவு பழக்கவழக்கங்கள், ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள், ஹார்மோன் பிரச்சனைகள் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் பட்டு போன்ற மென்மையான கூந்தலை பெற பெரிதளவில் உதவுகின்றது.
முடியை பராமரிக்க உதவும் எளிய 4 வீட்டு வைத்தியங்கள் பற்றி விரிவாக காணலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் உதிர்ந்த முடியை மாற்றும்.கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எண்ணெயாகும். இது முடியின் தண்டுக்குள் ஊடுருவி, தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது மற்றும் ஃப்ரிஸைக் குறைக்கிறது.
வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவி, குறைந்தது 30 நிமிடங்களுக்கு பிறகு லேசான ஷாம்பு கொண்டு முடியை அலச வேண்டும்.
அவகோடா
அவகேடோவின் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். இது நீளமான மென்மையான பட்டுப்போன்ற கூந்தலை பெற உதவும்.
பழுத்த அவகேடாவை மசித்து, அதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கி வேர்கள் முதல் நுனிகள் வரை தடவி, 20-30 நிமிடங்களுக்கு நன்கு அலச வேண்டும்.
கற்றாழை
கற்றாழை உதிர்ந்த முடிக்கும் ஒரு அருமையான தீர்வாகும். கற்றாழையில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் தலைமுடியை மென்மையானதாக மாற்றும். மேலும் இது முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
கற்றாழை ஜெல்லை பிரித்தெடுத்து, தலைமுடியில் தடவ வேண்டும். பின்னர், 15-20 நிமிடங்கள் கழித்து முடியை அலச வேண்டும்.
பட்டு தலையணை
அன்றாட பயன்படுத்தும் தலையணை உறை உங்களின் ஃபிரிஸ் தலைமுடிக்கு உதவும். தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்க பட்டு தலையணை உறையை பயன்படுத்த வேண்டும்.
பட்டு உராய்வைக் குறைக்கிறது. மேலும் பட்டு மேற்பரப்பில் தூங்குவதால் தலைமுடி முடி உதிர்தல் தவிர்க்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |