கொத்து கொத்தா முடி கொட்டுதா? அடர்த்தியான கூந்தலுக்கு இதோ ஒரு சில வீட்டு வைத்தியம்
உணவு பழக்கவழக்கம், காற்று மாசுபாடு மற்றும் ஒழுங்கற்ற கூந்தல் பராமரிப்பு போன்றவற்றால் முடி வளர்ச்சியை தடுத்து முடி உதிர்வு ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில் நாம் தினசரி நாட்களில் சில மாற்றங்களை செய்வதன் மூலம், முடி வளர்ச்சியை மீண்டும் அதிகரிக்கலாம்.
வீட்டில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்ட சில எளிய பொருட்களை பயன்படுத்தி முடியை உள்ளே இருந்து ஊட்டமளித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.
வெந்தயம் மற்றும் எள் எண்ணெய்
வெந்தயம் மற்றும் எள் எண்ணெய் இரண்டுமே முடிக்கு ஊட்டமளிக்கும் சக்திகளை கொண்டுள்ளன.
இதனால், இந்த இரண்டிலிருந்தும் செய்யக்கூடிய ஹேர் ஹாயில் உதவியுடன், முடியின் வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்க செய்யலாம்.
இந்த எண்ணெயை முடியில் தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊற வைக்கவும். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் முடிக்கு தேய்ப்பது முடி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றை ஹேர் பேக் அல்லது எண்ணெய் முறையிலும் தலையில் பயன்படுத்தலாம்.
கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு மூன்று முறை தலையில் தடவி 2 மணி நேரத்திற்கு பின் குளிக்கலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் சாறு வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்ற இயற்கையான மூலப் பொருட்களை கொண்டுள்ளது.
நெல்லிக்காய் சாற்றை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் காய விட்டு அரை மணி நேரம் கழித்து முடியை நன்கு கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முடி கொட்டுவது நிற்கும்.
தேங்காய் பால்
தேங்காய்ப் பாலில் சிறிது ஆலிவ் எண்ணெயைக் கலந்து, அதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
இது முடியை நீளமாகவும், பட்டுப் போல பளபளப்பாகவும் மாற்றும்.
கொத்துகொத்தா முடி கொட்டுதா? முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான கூந்தலுக்கு Herbal Hair Wash Powder இதோ
வெங்காய சாறு
முடி வேகமாக வளர வெங்காய சாற்றை முடிக்கு பயன்படுத்தலாம். வெங்காயத்தை நன்கு அரைத்து வடிகட்டி எடுத்து தலைமுடிக்கு தடவ வேண்டும்.
இதில் உள்ள சல்பர் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |