எப்பொழுதும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த 5 பொருட்கள் போதும்
முகத்தில் சுருக்கம் விழுவது இயல்பான ஒன்று. சுருக்கம் விழாமல் இருக்க தங்களது வாழ்வியல் முறைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், முகத்தில் சுருக்கம் விழாமல் இளமையாக இருக்க உதவும் 4 பொருள் குறித்து பார்க்கலாம்.
1. முட்டை
முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தை இறுக்கமாக்க உதவும் ஒரு சிறந்த இயற்கை மூலப்பொருள் ஆகும்.
முட்டையின் வெள்ளையில் உள்ள புரதங்கள் உங்கள் சருமத்தை இறுக்கமாக்கவும், கோடுகள் மற்றும் முக சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கவும் உதவும்.
2. எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் உள்ள ஆஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சருமத்தை இறுக்குவதற்கான சிறந்த இயற்கை தீர்வாகும்.
எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் உங்கள் சருமத்தை இறுக்கமாகவும் பிரகாசமாகவும் வைக்க உதவுகிறது, இது உங்களுக்கு மிகவும் இளமையான சருமத்தை அளிக்கிறது.
3. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் சருமத்திற்கு பிரகாசம் அளிப்பது மட்டுமல்லாமல், அதை இறுக்கமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
இதனை பயன்படுத்துவது என்றும் இளமையான சருமத்தை பராமரிக்க முடியும்.
4. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் சருமத்தை இறுக்குவதற்கான சிறந்த இயற்கை தீர்வாக அமைகின்றது.
வெள்ளரிக்காய் சருமத்தை இறுக்கமாக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
5. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு மட்டுமல்லாமல், அதை இறுக்கமாகவும் வலுப்படுத்தவும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெய் சரும நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |