பட்டுப்போன்ற சருமத்திற்கு உகந்த வீட்டு வைத்தியம் - என்னென்ன பொருட்கள் தேவை?
பொதுவாகவே அனைத்து பெண்களும் மிருதுவாக சருமத்தை தான் அதிகமாக விரும்புவார்கள். ஆனால் அது ஒரு சிலருக்கு அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதும் இல்லை.
அதற்காக மனம் தளர வேண்டாம். நீங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒப்பனைப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் தான் உங்களுடைய சருமத்திற்கு அது பதில் வழங்குவதில்லை.
இம்முறை வீட்டில் இருக்கும் ஒரு சில எளிமையான பொருட்களை வைத்து எப்படி மிருதவான சருமத்தை பெறலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
எலுமிச்சை சாறு
முட்டையின் வெள்ளைக்கருவுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் உருவாக்க வேண்டும். பின் அதை உங்கள் சருமத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு அப்படிவே விடவும். அடுத்ததாக வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
தக்காளி மாஸ்க்
தக்காளி பல வகையில் சருமத்திற்கு நன்மையை வழங்குகிறது. ஒரு தக்காளியை மசித்து எடுத்துக்கொண்டு அதை சருமத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைக்க வேண்டும்.
நீரேற்றம்
உங்கள் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைக்கும் ஒரே தீர்வு நீரேற்றம். நீங்கள் குடிக்கும் தண்ணீர் அளவிற்கு உங்களது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுப்போலவே சருமமும். சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டசத்தையும் தண்ணீர் வழங்கும். எனவே தினமும் தண்ணீர் குடிப்பதை அதிகரித்துக்கொள்ளவும்.
தேன்
வீட்டு வைத்தியங்கள் என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது தேன். இது பல வகையில் ஒருவருடைய சருமத்திற்கு உதவுகிறது. கொரிய தோல் பராமரிப்பு மற்றும் சருமத்தை சுத்தம் செய்தல் போன்ற பல தேவைகளுக்கு இது உதவுகிறது. இதை உங்கள் சருமத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் உளுந்து மாவுடன் தேன் கலந்து முகத்தை ஸ்க்ரப் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் சருமமானது மென்மையாக மாறும்.
தேயிலை எண்ணெய்
தேயிலை எண்ணெய் உடல் எடையை குறைப்பதற்கு மட்டுடல்லாமல் சருமத்திற்கும் பல வகையில் உதவுகிறது. உங்களது சருமத்தை மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், உங்களுடைய ஒரே தீர்வு தேயிலை எண்ணெய். தேயிலை மர எண்ணெய் பருத்தி துணியால் நனைத்து உங்கள் முகத்தில் மசாஜ் வெய்ய வேண்டும். பின்னர் சூடான நீரில் முகத்தை கழுவி எடுக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |