கோடைகாலத்தில் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் வீட்டு வைத்தியம்
வெயில் காலத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
அந்தவகையில், முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் சில வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- கற்றாழை- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை ஜெல் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
பின் உச்சந்தலை மற்றும் தலைமுடியில் இதை தடவி சில நிமிடம் மசாஜ் செய்யவும்.
அடுத்து 30 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் லேசான ஷாம்பூவுடன் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- முட்டை- 1
- தயிர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
தயிருடன் முட்டையை நன்கு அடித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதை முடி வேர்களிலிருந்து நுனிகள் வரை தடவி, 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும்.
பின்னர் குளிர்ந்த நீரில் கூந்தலை கழுவி உலர வைத்துக்கொள்ளவும்.
3. தேவையான பொருட்கள்
- செம்பருத்தி- 10
- வெந்தயம்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
வெந்தய விதைகளை ஒரு இரவு முழுக்க ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை செம்பருத்தி இலை பேஸ்டுடன் கலந்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவி, 30 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |