முட்டிகளில் இருக்கும் கருமையை நீக்க உதவும் பேக்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவருமே முகம், கை மற்றும் கால்களை வெள்ளையாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் ஒரு சிலருக்கு வாயை சுற்றியும், முழங்கை, முழங்கால்கள் அடர் கருப்பு நிறத்தில் இருக்கும்.
அந்தவகையில், முட்டிகளில் இருக்கும் கருமையை நீக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- பால்- 3 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
இதனை அடிக்கடி பயன்படுத்தும்போது முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமை நீங்குவதோடு, மென்மையாகவும் இருக்கும்.
2. தேவையான பொருட்கள்
- கற்றாழை- 1 துண்டு
- பால்- 3 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் இந்த கிண்ணத்தில் கற்றாழை ஜெல் மற்றும் பாலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
அதன் பின் குளிர்ந்த நீரால் இதனை கழுவ வேண்டும்.
இதனை தினமும் பயன்படுத்தும்போது, முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமை நிரந்தரமாக நீங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |