உடலில் உள்ள முடிகளை இயற்கை முறையில் அகற்றலாம்.., சிறந்த வீட்டு வைத்தியம்
பெண்களுக்கு முகத்தில் மற்றும் உடல் பகுதிகளில் வளர்ந்து வரும் முடிகள் சிரமத்தோடு கூடிய வலியையும் ஏற்படுத்தும்.
உடலில் உள்ள முடிகளைநீக்கினால் முகப்பொலிவோடு அழகான தோற்றத்தை பெறலாம்.
அந்தவகையில், உடலில் உள்ள முடிகளை இயற்கை முறையில் அகற்ற உதவும் சில வீட்டு வைத்தியம் குறித்து விரிவாக காணலாம்.
சர்க்கரை + எலுமிச்சை
ஒரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை, 1/4 கப் எலுமிச்சை சாறு மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
கலவையை தோலில் தடவி, முடி வளரும் பகுதியில் மெதுவாக தேய்க்கவும். சுமார் 10-15 நிமிடங்கள் உலர விடவும், ஈரமான துணியால் மெதுவாக துடைக்கவும்.
முடி முழுவதுமாக போகலாம், ஆனால் முடி மெல்லியதாக இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். எனவே இதனை தொடர்ந்து வாரத்திற்கு 1-2 முறை செய்யவும், நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறலாம்.
மஞ்சள் + உளுந்து மா
ஒரு பாத்திரத்தில் ½ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் உளுந்து மா மற்றும் பால் சேர்த்து ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்யவும்.
இந்த பேஸ்ட்டை தோலில் தடவி, பேஸ்ட் காய்ந்த பிறகு உங்கள் கைகளால் தேய்க்கவும்.முடிகள் சிறு வலி இல்லாமல் வந்து விடும்.
பப்பாளி + மஞ்சள்
பச்சை பப்பாளியை தோலுரித்து பிசைந்து அதில் ½ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். அதை நன்றாக பேஸ்ட் செய்து தோலில் தடவவும். 10 - 20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
பப்பாளியில் பப்பெய்ன் என்ற நொதி உள்ளது. இது வயதானதை தோற்றத்தை தடுக்க உதவுகிறது, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் முகப்பருவைக் குறைக்கிறது.
பப்பாளி மற்றும் மஞ்சள் இரண்டிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது சரும செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |