80 வயது விதவைப்பெண்ணை காதலித்து திருமணம் செய்த 57 வயது வீடற்றவர்., மீண்டும் நடுத்தெருவுக்கு வந்த சோகம்
தன்னை விட 23 வயது மூத்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட 57 வயது வீடற்றவர், தனது மனைவி இறந்ததும் மீண்டும் நடுத்தெருவுக்கு வந்துள்ளார்.
தற்போது இந்த வித்தியாசமான திருமணம் மக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த நபரின் பெயர் டேவிட் ஃபௌட் மற்றும் பெண்ணின் பெயர் கரோலின் ஹாலண்ட்.
கோடிக்கணக்கான சொத்தில் பாதிக்கு மேல் தானம்., ரூ.760 சம்பளத்தில் தொடங்கி ரூ. 4,00,000 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தொழிலதிபர்
கலிபோர்னியாவில் வசிக்கும் 57 வயதான டேவிட், சொந்தமாக வீடு இல்லை, நிரந்தர வேலை இல்லை. சிறு சிறு வேலைகள் செய்தும், பூங்காவில் வாழ்ந்து கொண்டும் வாழ்நாளை கழிக்கிறார். பிறர் வீடுகளில் பழுதடைந்த பொருட்களை சரி செய்து கிடைக்கும் பணத்தில் டேவிட் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், டேவிட் 80 வயதான கரோலினை சந்தித்தார். காதலில் விழுந்தார் சில வாரங்களில் அவர்களது காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். திருமணத்திற்குப் பிறகு கரோலின் இறந்த பிறகு பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
கரோலின் நிறைய பணம் கொண்ட பெண். அவருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். ஆனால் தற்போது அந்த இரண்டு மகள்களும் டேவிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டேவிட் அவர்களின் தாயாரை மயக்கி பணத்தை அபகரித்ததாகவும் கூறப்படுகிறது.
கரோலினின் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை விற்று முழுத் தொகையையும் டேவிட்டிடம் தருவதாக அம்மா உறுதியளித்ததாக கரோலினின் இரு மகள்களும் கூறினர்.
ஆனால், தாயின் மரணத்திற்குப் பிறகு, அவரது சொத்துரிமை அவரது இரண்டு மகள்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், தாயின் சொத்தில் ஒரு பைசா கூட தரமுடியாது என டேவிட்டிடம் கூறினர்.
மனைவியின் ஞாபகமாக மிஞ்சிய வேன்., மீண்டும் பழைய வாழ்க்கை
இப்போது டேவிட் மீண்டும் வீடற்றவர். பழைய வாழ்க்கையை வாழ்கிறார். ஆனால், கரோலின் உதவியுடன் தான் வாங்கிய வேன் தன்னிடம் இருக்கிறது என கூறியுள்ளார். தான் முன் வாழ்ந்துவந்த Cayucos பகுதியில் நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார்.
மேலும், அவர் தனது மனைவி மற்றும் காதலியை இன்னும் காதலிப்பதாக கூறினார். கரோலினை மிஸ் செய்கிறேன் என்றார். கரோலினை நேசித்தேன். அவளை பெருமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவேன் என்றார்.
ரூ.464 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழக கிரிக்கெட் வீரர்., ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் முதலீடு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Homeless man with dark past, Carolyn Holland David Foute