இயற்கையாக முகத்தை வெள்ளையாக்க இந்த ஒரு பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக பெண்களுக்கு முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
இருந்தாலும் அனைத்து பெண்களும் எப்போதும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
அந்தவகையில், இயற்கையாக முகத்தை வெள்ளையாக்க கரித்தூளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கரி தூள்- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கரி தூள், கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்துகொள்ளவும்.
பின் முகத்தை சுத்தமான நீரால் கழுவி பருத்தி துணி வைத்து துடைத்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த கலவையை கண்கள் மற்றும் உதடுகளை தவிர்த்து சமமாக தடவவும்.

இதற்கடுத்து இதனை 15 அப்படியே நன்கு உலரவைத்து தொடர்ந்து கைகளை பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்யவும்.
இறுதியாக முகத்தை வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி சுத்தம் செய்துகொள்ளவும்.
இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் நன்கு வெள்ளையாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |