முடி உதிர்வை நிறுத்த உதவும் தேங்காய் பால்.., எப்படி பயன்படுத்துவது?
அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை தான் முடி உதிர்தல்.
தூக்கமின்மை, மருந்துகள் எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால் முடி வலுவிழந்து உடைந்து விடுகிறது.
இந்நிலையில், நிரந்தமாக முடி உதிர்வை நிறுத்த தேங்காய் பாலை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் பால்- 5 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
- கற்பூரப் பொடி- ¼ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் பால், தயிர் மற்றும் கற்பூர பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
அதன் பிறகு இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் இருந்து தலைமுடியின் நுனி வரை தடவ வேண்டும்.
அதன்பிறகு தலைமுடியை ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியைக் கழுவலாம்.
வாரத்திற்க்கு ஒரு முறை இந்த தேங்காய் பால் ஹேர்பேக்கை பயன்படுத்தி வர முடி உதிர்வை நிறுத்தும்.
2. தேவையான பொருட்கள்
- தேங்காய் பால்- 4 ஸ்பூன்
- தேன்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் பால், தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதற்குப் பிறகு, இந்த கலவையை உச்சந்தலையில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
பின் 2 மணி நேரம் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரால் கழுவி, தலைமுடியில் கண்டிஷனரைப் பயன்படுத்தவும்.
இந்த ஹேர்பேக் தலைமுடிக்கு பளபளப்பு மற்றும் வலிமையைத் தரும் மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |