வயதானாலும் இளமையாக இருக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக வயது அதிகரித்து செல்லும்போது முகத்தில் சுருக்கம் விழுவது என்பது இயல்பான ஒன்று.
இதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அதேபோல், சூரியனின் புற ஊதா கதிர்கள், கொலாஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களின் உற்பத்தி குறைதல் ஆகியவை தோல் சுருக்கங்களுக்கு முக்கிய காரணங்களாகும்.
அந்தவகையில், வயதானாலும் இளமையாக இருக்க உதவும் இயற்கை பேஸ்பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 2 ஸ்பூன்
- தயிர்- 3 ஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் எப்போதும் இளமையாக இருக்கும்.
2. தேவையான பொருட்கள்
- ஆரஞ்சு சாறு- ½ கப்
- தேன்- 2 ஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு சாறை எடுத்து அதனுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு இதனை சருமத்தில் தடவி நன்கு காய வைத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர சருமம் எப்போதும் இளமையாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |