வேகமாக முகத்தை வெள்ளையாக்க உதவும் பச்சை பயறு: எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க பச்சை பயிரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் பச்சை பயிரை வெயிலில் நன்கு காயவைத்து எடுக்க வேண்டும்.
இதற்கு பிறகு இதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுக்க வேண்டும்.
பின் இந்த பொடியை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துகொள்ளவும்.
இதனை நீங்கள் தினமும் முகம் கழுவும் போது இந்த பச்சை பயிறு பொடியை 1 ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து முகத்திற்கு தேய்க்கலாம்.
இந்த பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பளபளக்கும் சருமம் கிடைக்கும்.
இதை தினமும் காலை மாலை என இருவேளையும் முகத்திற்கு பயன்படுத்தி வரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |