அசுர வேகத்தில் முடி வளர உதவும் மூலிகை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர வீட்டிலேயே எளிய முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 லிட்டர்
- கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
- செம்பருத்தி பூ- 10 பூ
- செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி
- வேப்பிலை- ஒரு கைப்பிடி
- மருதாணி இலை- ஒரு கைப்பிடி
- சாம்பார் வெங்காயம்- 5
- சோற்றுக்கற்றாலை- ஒரு கப்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- பெரிய நெல்லிக்காய்- 3
- கருசீரகம்- 2 ஸ்பூன்
- வெட்டிவேர்- ஒரு கைப்பிடி
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பெரிய இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு காயவிடவும்.
பின் அதில் கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை மற்றும் முடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி, இடித்த வெங்காயம், இடித்த நெல்லிக்காய் சேர்க்க வேண்டும்.
பின் இதில் கற்றாழையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும்.
அடுத்து இதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவர்றை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
தொடர்ந்து சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் நன்றாக நிறம் மாறி வரும் வரை அதனை காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒருநாள் முழுவதும் அப்படியே வைத்து பின் அதனை வடிகட்டி ஒரு குவளையில் வைத்து பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெய் முடிகொட்டுதலை நிறுத்தி முடி அடர்த்தி அதிகமாக்க இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |