முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் மூலிகை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர வீட்டிலேயே எளிய முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 150ml
- கறிவேப்பிலை- 200g
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு அதில் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெயானது கருப்பாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
பிறகு அடுப்பை அணைத்து ஆற விட்டு வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டில்களில் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த எண்ணெயை வாரத்திற்கு 3 முறை தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.
பிறகு 30 நிமிடங்கள் நன்கு ஊறவிட்டு லேசான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிக் கொள்ளுங்கள்.
கிடைக்கும் நன்மைகள்
இந்த எண்ணெய் முன்கூட்டியே நரைப்பதை தடுக்கிறது. இது கூந்தலுக்கு நல்ல நிறத்தை தருகிறது.
இது கூந்தலுக்கு வேர்களில் இருந்து ஊட்டமளிக்கிறது. மேலும், தலையில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |