அடர்த்தியான நீளமான கூந்தலை பெற உதவும் மூலிகை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி வேகமாக முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் மூலிகை எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கப்
- வெந்தயம்- ¼ கப்
- நெல்லிக்காய் தூள்- ¼ கப்
- எள்- ¼ கப்
- செம்பருத்தி இதழ்- 10
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலை, வெந்தயம், எள் மற்றும் செம்பருத்தி இதழ்களை குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.
இதற்குப் பிறகு, வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவைக்கவும். இப்போது அதில் நெல்லிக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் இந்த பொடியை கலந்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
பின் இந்த எண்ணெயை ஆறவைத்து வடிகட்டி தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
இறுதியாக 1 மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |