கட்டுக்கடங்காமல் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சீரம்: எப்படி தயாரிப்பது?
மனிதர்களுக்கு இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
இயற்கையான முறையிலேயே முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் ஹேர் சீரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
- ஆர்கான் எண்ணெய்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆர்கான் எண்ணெய் கலக்கவும்.
இப்பொழுது, ஈரமான முடிக்கு சீரம் போல் இதை தடவிக்கொள்ளலாம்.
2. தேவையான பொருட்கள்
- திராட்சை விதை எண்ணெய்- 4 ஸ்பூன்
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 1
- லாவெண்டர் எண்ணெய்- சில துளிகள்
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில் திராட்சை விதை எண்ணெய், வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் சேர்க்கவும்.
அதை நன்றாக கலந்து ஹேர் சீரமைப் பயன்படுத்தலாம்.
3. தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- ஜோஜோபா எண்ணெய்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மற்றும் ஜோஜோபா எண்ணெய் கலக்கவும்.
நன்றாகக் கலந்ததும், இந்த சீரமை முடியின் நடுப்பகுதியிலிருந்து முடியின் நுனி வரை தடவலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |