வலுவான நீளமான தலைமுடியை பெற உதவும் இயற்கை சீரம்.., எப்படி தயாரிப்பது?
மனிதர்களுக்கு இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
இயற்கையான முறையிலேயே முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் ஹேர் சீரமை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- ½ கப்
- ஜோஜோபா எண்ணெய்- ¼ கப்
- ரோஸ்மேரி எண்ணெய்- சிறிதளவு
- கற்றாழை ஜெல் - சிறிதளவு
எப்படி தயாரிப்பது?
முதலில் ரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் நன்கு கலந்துக் கொண்ட பின்னதாக, இந்த சீரமை லேசாக சூடாக்கி ஆறியதும் ஸ்ப்ரே பாட்டிலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த சீரத்தை தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது, சிறிதளவு கைகளில் ஊற்றிக் கொண்டு உச்சந்தலையில் முதல் நுனி வரை தேய்த்துக் கொள்ளவும்.
பின் ஒரு 10 நிமிடங்கள் ஆவது உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |