கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் அதிசய எண்ணெய்- எப்படி தயாரிப்பது?
முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
- செம்பருத்திப் பூ- 5
- வெந்தயம்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய், செம்பருத்தி பூ மற்றும் வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
பின் எண்ணெய் நன்கு நிறம்மாறி வந்ததும் அடுப்பை அனைத்து நன்கு ஆறவிடவும்.
அடுத்து இதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.
இதனையடுத்து இந்த எண்ணெயை தினமும் மயிர்க்கால்களில் தடவ வேண்டும்.
இந்த எண்ணெய் முடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது. மேலும் பொடுகு தொல்லை, இளநரை போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |