கருகருன்னு அடர்ந்த கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஆயுர்வேத எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு ஆயுர்வேத எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பெரிய நெல்லிக்காய்- 2
- மிளகு- ½ ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 15
- வேப்பிலை- 2 கொத்து
- கருஞ்சீரகம்- ஒரு ஸ்பூன்
- கருப்பு எள்ளு- 1 டீஸ்பூன்
- வெற்றிலை- 2
- துளசி- 10 இலைகள்
- கற்றாலை- 1 மடல்
- செம்பருத்தி- 8 பூக்கள்
- வெள்ளை கரிசலாங்கண்ணி- ஒரு கட்டு
- பன்னீர் ரோஸ்- 400g
- கருவேப்பிலை- ¼kg
- தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
- ஆளி விதை- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு மிக்ஸியில் மிளகு, வெந்தயம், கருப்பு எள்ளு, ஆளி விதை, கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
பின் அதனுடன் சின்ன வெங்காயம், துளசி, கற்றாழை, செம்பருத்தி பூ, விதை நீக்கிய நெல்லிக்காய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்த நன்றாக அரைத்துக் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே மிக்ஸி ஜாரில் வேப்பிலை, வெற்றிலை, பன்னீர் ரோஸ், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையையும் ஏற்கெனவே செய்து வைத்துள்ள கலவையும் சேர்த்து கிளறுங்கள்.
இதன் பின் கரிசலாங்கண்ணி இலையையும் மிக்ஸியில் நைசாக அரைத்து ஏற்கனவே அரைத்த கலவையுடன் சேர்க்கவும்.
இதனையடுத்து அரைத்து வைத்துள்ள அனைத்து கலவையையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
இந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவும்.
எண்ணெய் நன்கு கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து குறைந்தது ஒரு மணிநேரமாவது எண்ணெய்யைக் காய்ச்ச வேண்டும்.
எண்ணெய் சரியான பக்குவத்தில் காய்ச்ச வந்த பிறகு அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி 4 மணிநேரம் நன்றாக ஆற வைக்கவும்.
எண்ணெய் நன்கு ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி கூந்தலுக்கு பயன்படுத்தவும்.
தொடர்ந்து தேய்த்து வந்தால் முடி உதிர்வு, முடி பிளவு, இளநரை ஆகியவை தடுக்கப்படும். மேலும் கூந்தல் நன்கு கருகருவென அடர்த்தியாக வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |