Horlicks: சத்தான ஹார்லிக்ஸ்.., இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்
ஹார்லிக்ஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பானங்களில் ஒன்றாக உள்ளது.
ஒரு சிலர் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என்று வாங்கிக் கொள்வார்கள். ஓர் சிலர் ரசாயனங்கள் கலப்பார்கள் என்று வாங்கமாட்டார்கள்.
இனி எந்தவித பயமும் இன்றி கடைகளில் வாங்காமல் ஹார்லிக்ஸை இனி வீடுகளிலேயே சுலபமாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- பார்லி தானியம்- 1 கப்
- பச்சை வேர்க்கடலை- 1 கப்
- பாதாம் - ½ கப்
- பால் பவுடர்- ½ கப்
- வெல்லம் - ½ கப்
- மால்ட் பவுடர் - 1 கப்
- கோகோ பவுடர் - 3-5 ஸ்பூன்
செய்முறை
பார்லி பவுடர் செய்வதற்கு பார்லி தானியங்களை ஊற வைத்து முளைக்கட்டி வைக்கவும். பின்னர் இதை ஓவனில் அல்லது கடாயில் வைத்து வறுத்து மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.
அடுத்தப்படியான எடுத்து வைத்துள்ள பாதாம் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனுடன் அரைத்த பார்லி பவுடர், பால் பவுடர், மால்ட் பவுடர் மற்றும் வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லேட் சுவை பிடிக்கும் என்பதால் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஹார்லிக்சுடன் கோகோ பவுடரைச் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த ஹார்லிக்ஸ் பவுடரை டப்பாவில் சேகரித்து வைத்து குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |