Gulab Jamun: ஒரு கப் ரவை இருந்தால் போதும்.., சுவையான குலாப் ஜாமூன் ரெடி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இனிப்புதான் இந்த குலாப் ஜாமுன்.
பண்டிகை காலங்களில் கடைகளில் விற்கப்படும் தயார் செய்துவைக்கப்பட்ட மாவை பயன்படுத்தி வீட்டில் இதை செய்வோம்.
அந்தவகையில் வீட்டில் பயன்படுத்தும் ரவை பயன்படுத்தி குலாப் ஜாமுன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவா - ½ கப்
- பால் - 1½ கப்
- நெய் - 2 ஸ்பூன்
- சர்க்கரை - 1 கப்
- தண்ணீர் - 1½ கப்
- ஏலக்காய் - 3
- எலுமிச்சை சாறு - ½ ஸ்பூன்
- குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை
முதலில் வாணலில் ரவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து பின் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் அதில் நெய் சேர்த்து நன்றாக உருண்டை பிடிக்கும் பதத்திற்கு கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறவும்.
அடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சூடு ஆறியதும் கைகளில் சிறிது நெய் தடவி 5 நிமிடங்களுக்கு நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீரைச் சேர்த்து சர்க்கரை கரைந்து மிதமான தீயில் 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின் இதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பின் ஏலக்காய் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து உருண்டைகளை பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
பிறகு அவற்றை சூடான சர்க்கரை பாகில் சேர்த்து குறைந்தது 5- 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் சுவையான ரவை குலாப் ஜாமுன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |