கைக்கு அடங்காமல் அடர்த்தியாக முடி வளர உதவும் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் மல்லிகை பூ எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மல்லிகைப்பூ - 1 கப்
- தேங்காய் எண்ணெய் - 1 கப்
தயாரிக்கும் முறை
முதலில் மல்லிகைப்பூக்களை நன்றாக கழுவி, உலர வைக்கவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.
பின் இந்த எண்ணெய் நன்கு குளிர்ந்த பிறகு, ஒரு ஜாடியில் மல்லிகைப்பூக்களை போட்டு, அதில் எண்ணெயை ஊற்றவும்.
இந்த கண்ணாடி ஜாடியை 2 வாரம் வெயிலில் வைக்கவும். குறிப்பாக நாள்தோறும் எடுத்து இதை நன்றாக கலந்து விடவேண்டும்.
இரண்டு வாரத்திற்கு பிறகு இந்த எண்ணெயை வடிகட்டி தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
இந்த மல்லிகை பூ எண்ணெயை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்திவர கூந்தல் நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |