டை இல்லாமல் நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை ஹேர்பேக்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இருப்பினும், இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், இயற்கையான முறையில் நரைமுடியை கருப்பாக உதவும் ஹேர்பேக் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மருதாணி பொடி- 1 ஸ்பூன்
- செம்பருத்தி பொடி- 1 ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி- 1 ஸ்பூன்
- கரிசலாங்கண்ணி பொடி- 1 ஸ்பூன்
- வில்வ இலை பொடி- 1 ஸ்பூன்
- எலுமிச்சை தோல் பொடி- 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
- தயிர்- 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மருதாணி பொடியுடன், செம்பருத்தி பூ பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி, எலுமிச்சை தோல் பொடி, முருங்கை எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், எலுமிச்சை சாறு, தயிர் போட்டு கலந்துகொள்ளவும்.
பின் இந்த கலவையை ஒரு நாள் இரவு முழுக்க அப்படியே விட்டுவிடுங்கள்.
அடுத்து தலைமுடியில் எண்ணெய் தேய்த்த அரை மணி நேரத்திற்கு பிறகு கைகளில் கையுறை போட்டு தலைமுடியில் இந்த கலவையை தடவவும்.
இதற்கடுத்து ஒரு மணி நேரம் தலையில் அப்படியே விட்டு அதன் பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு குளிக்கலாம்.
இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி நிரந்தரமாக கருப்பாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |