நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் கடுகு எண்ணெய்: எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இருப்பினும், இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், இயற்கையான முறையில் நரைமுடியை கருப்பாக்க கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- கடுகு எண்ணெய்
- வெந்தய பொடி
தயாரிக்கும் முறை
கடுகு எண்ணையோடு வெந்தயப் பொடி சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
வெந்தயத்தின் சாறு முழுமையாக எண்ணெயில் இறங்கும்வரை சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு, ஆறவிடுங்கள்.
நன்கு ஆறிய பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, இந்த எண்ணையை தினசரி தேய்த்து வர, நரைமுடி மாறி கொஞ்சம் கொஞ்சமாக கருப்பாக மாற ஆரம்பிக்கும்.
2. தேவையான பொருட்கள்
- கடுகு எண்ணெய்
- நெல்லிக்காய்
தயாரிக்கும் முறை
கடுகு எண்ணெயுடன் உலர்ந்த நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பொடி சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
பின்பு ஆறவிட்டு வடிகட்டிப் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெயை தினமும் தலைக்குத் தேய்த்து வர, முடி நன்கு கருமையாகவும் நீளமாகவும் வளரும். நரைமுடியும் மறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |