முழங்கால் வரை முடியை நீளமாக வளர்க்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும்
முடி வளர்ப்பது என்பது ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசை.
இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
- பிருங்கராஜ் செடி- சிறிதளவு
தயாரிக்கும் முறை
முதலில் பிரிங்ராஜ் செடியின் இலைகளை நன்கு உலர்த்தி நன்றாக பொடியாக அரைத்து எடுத்தால் பிருங்கராஜ் பொடி தயார்.
தேங்காய் எண்ணெயுடன் 1 ஸ்பூன் பிருங்கராஜ் பொடியை கலந்துகொள்ளவும்.
பின் இதனை உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி, 30 நிமிடங்கள் அப்படியே ஊறவைக்கவும்.
இறுதியாக மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வர முடி நன்கு ஆரோக்கியமாக வளரும்.
இரும்பு, மெக்னீசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின் ஈ, டி போன்றவை பிருங்கராஜில் உள்ளன. இது முடி வளர்ச்சிக்கு சிறந்தவை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |