10 நாட்களில் கருமையான முகத்தை பளபளப்பாக மாற்றும் பப்பாளி, கற்றாழை ஜெல்
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களது சருமத்தை அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் போதியளவு பராமரிப்பு இல்லாமல் உங்களுடைய அழகிய சருமம் பொழிவற்று செல்லும்.
அதை தடுக்கும் விதமாக பலரும் பல முயற்சியை செய்வதுண்டு. இருப்பினும் அவை உங்களுக்கு நினைத்த பதிலை வழங்கவில்லையா?
அதற்காக கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஒரு முறையாவது பப்பாசி மற்றும் கற்றாழை வைத்து இப்படி செய்து பார்த்தால் போதும். அதை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
பப்பாளி மற்றும் கற்றாழை ஜெல் மாய்ஸ்சரைசரை செய்வது எப்படி?
முதலில் பழுத்த பழுத்த பப்பாளியின் சதையை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
பின் அதை மசித்து பேஸ்ட் செய்துக்கொள்ளவும்.
அடுத்ததாக அதில் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் அதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி மசாஜ் செய்யவும்.
இறுதியாக குளிர்ந்த நீரில் கழுவுவதற்கு முன் 15-20 நிமிடங்கள் விடவும்.
இதை தினமும் பயன்படுத்தி வருவதன் மூலம் நீங்கள் சிறந்த பலனை பெற முடியும்.
இதை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
பப்பாளியில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இது ஆரோக்கியமான சருமத்தை பெற முற்றிலும் உதவுகிறது.
பப்பாளியில் பப்பைன் என்ற நொதி உள்ளது, இது இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாக செயல்படுகிறது. இது இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது.
பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான பீட்டா கரோட்டின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் வயதான தோற்றத்தை குறைக்கும்.
கற்றாழையில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், சருமத்தை நீரேற்றமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கற்றாழையில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை எரிச்சல் அல்லது வீக்கமடைந்த சருமத்தை ஆற்றவும் அமைதிப்படுத்தவும் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |