நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை ஹேர்பேக்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், வீட்டிலேயே நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை ஹேர்பேக் பற்றி பார்க்கலாம்.
பிளாக் டீ
தலைக்கு குளித்த பின் பிளாக் டீ தண்ணீரை கொண்டு முடியை அலசினால் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம்.
அதுமட்டுமின்றி, பிளாக் டீ தலைமுடியில் படும் போது, கூந்தல் நல்ல பளபளப்புடன் இயற்கையாக பளபளக்கும்.
பாதாம் எண்ணெய்
வெள்ளை முடியைத் தவிர்க்க, பாதாம் எண்ணெயை சூடாக்கி உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
இந்த எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், நரை முடியை தடுக்கிறது.
உருளைக்கிழங்கு
வெள்ளை முடி கருப்பாக மாற உருளைக்கிழங்கை வேகவைத்து அந்த நீரில் தலையை அலசவும்.
அதன் பிறகு சிறிது தயிரை தலையில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.
கருப்பு காபி
கருப்பு காபியை முடியின் உச்சந்தலை முதல் நுனி வரை தடவவும். இதனால் வெள்ளை முடி கருமையான முடியாக மாறும்.
ஆம்லா
நெல்லிக்காயை தண்ணீரில் கொதிக்க வைத்து மிருதுவான பேஸ்ட்டாக அரைக்கவும். அதை நேரடியாக முடிக்கு தடவவும்.
இதனை மாதத்தில் மூன்று முறை செய்து வந்தால் வெள்ளை முடி கருப்பாகவும் அழகாகவும் மாறும்.
கறிவேப்பிலை + தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயுடன் கறிவேப்பிலையைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சி மற்றும் ,முடியின் ஊட்டச்சத்துக்கு உதவும்.
இதனை முடிக்கு பயன்படுத்திய பிறகு உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இது உங்கள் தலைமுடியை கருப்பாக மாற்றும்.
வெங்காயம் + எலுமிச்சை சாறு
முன்கூட்டிய நரையைத் தடுக்கும் பழமையான தீர்வுகளில் ஒன்று வெங்காயம்.
வெங்காயம் நரை முடியை மாற்றுவது மட்டுமல்லாமல், அவற்றின் வைட்டமின் சி மூலம் அற்புதமான பிரகாசத்தையும் சேர்க்கிறது.
வெங்காய சாற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முடிக்கு தடவு பின் நீரினால் அலசிக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |