60 வயதிலும் இளமையாக இருக்க இந்த ஒரு பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக பெண்கள் அனைவருக்கும் வயதானாலும் இளமையுடன் இருக்கவேண்டும் என்று இருக்கும்.
அந்தவகையில், எப்போதுமே இளமையாக இருக்க அரிசி மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- ஆளி விதை- 1 ஸ்பூன்
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள்- 1
- தேன்- ½ ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 5 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஆளி விதைகளை அரைத்து அதன் பொடியை தயாரிக்க வேண்டும்.
பின் ஒரு கிண்ணத்தில் ஆளி விதை பொடி, அரிசி மாவு, வைட்டமின் ஈ மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுத்து இதனுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து பேஸ்ட் போல் நன்கு கலக்கவும்.
இப்போது இதை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளலாம்.
இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் எப்போதும் இளமையாக இருக்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |