முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் இயற்கை வைத்தியம்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக ஆண், பெண் என அனைவரும் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நிரந்தரமாக நீக்க உதவும் பேக்கை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி- 1 கப்
- தண்ணீர்- 2 கப்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் அரிசியை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
பின் சாதம் வெந்ததும், அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வடிகட்டிய அரிசி நீரை நன்கு குளிர வைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து 4-5 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

இதனை பஞ்சுருண்டையில் நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 2 நிமிடம் காய வைக்க வேண்டும்.
பின்பு குளிர்ந்த நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.
இதனை தினமும் தொடர்ந்து 2-3 முறை பயன்படுத்தி வர முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |