முகம் பளிச்சென்று மாற உதவும் ஸ்ட்ராபெர்ரி Facewash.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
சூரிய கதிர்கள், ஒழுங்கான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் முகம் பொலிவிழந்து காணப்படுகின்றனர்.
அந்தவகையில், வீட்டிலேயே முகம் பளிசென்று மாற ஸ்ட்ராபெர்ரி பேஸ்வாஷை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஸ்ட்ராபெர்ரி- 4
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- காஸ்டில் சோப்- ½ கப்
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள்- 2
- லாவெண்டர் எண்ணெய்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை நன்கு கழுவி அதனை அரைத்து கூழாக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
அடுத்து சூடான தேங்காய் எண்ணெய்யில் அரைத்த ஸ்ட்ராபெர்ரி கூழை சேர்த்து நன்கு கிளறி காஸ்டில் சோப்பை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
இதற்கடுத்து இதனை நன்கு ஆறவைத்து பின் இதில் வைட்டமின் ஈ காப்ஸ்யூல் மற்றும் லாவண்டர் எண்ணெய் சேர்த்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
இந்த ஸ்ட்ராபெர்ரி பேஸ்வாஷ் விலையும் மிகவும் மலிவானது. மேலும், இந்த இயற்கை பேஸ்வாஷ் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |