இந்தியாவில் 2026-ல் அறிமுகமாகும் Honda 0 series SUV
ஹோண்டா நிறுவனம், 2026-ஆம் ஆண்டு இந்தியாவில் தனது புதிய 0 series எலக்ட்ரிக் SUV கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
CES 2025 கண்காட்சியில் முதன்முறையாக prototype வடிவில் வெளியிடப்பட்ட இந்த எஸ்யூவி, புதிய born-electric தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது முதலில் வட அமெரிக்காவில் விற்பனைக்கு வரவுள்ளது, பின்னர் உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும்.
இந்த எஸ்யூவி, ஹோண்டாவின் 0 சீரிஸ் எனப்படும் புதிய எலக்ட்ரிக் வாகன வரிசையின் முதல் மொடலாக இருக்கும்.

Space Hub எனும் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இதன் வடிவமைப்பு, MPV போன்று தோற்றமளிக்கிறது.
அகன்ற கண்ணாடி பகுதிகள் மற்றும் சீரான உடல் வடிவமைப்பு aerodynamics-ஐ மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. U-வடிவ பின்புற விளக்குகள் மற்றும் பல அடுக்குகள் கொண்ட பம்பர் வடிவமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த எஸ்யூவி, software-defined vehicle (SDV) எனப்படும் தொழில்நுட்பத்தில் இயங்கும். ASIMO OS எனும் புதிய இயக்க முறைமையை கொண்டு, வாகனத்தின் அனைத்து மின்னணு அமைப்புகளையும் நிர்வகிக்க முடியும். இது automated driving மற்றும் OTA updates-ஐ ஆதரிக்கும்.
தொழில்நுட்ப விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. எனினும், 80kWh முதல் 100kWh வரை திறன் கொண்ட ultra-thin battery-களுடன், சுமார் 500km வரை பயணிக்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும்.
இந்தியாவில் இது Completely Built Unit-ஆக இறக்குமதி செய்யப்படும். விலை உயர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |