Honda Activa-e இனி வீட்டிலேயே சார்ஜ் செய்யலாம் - விரைவில் charging dock வசதி அறிமுகம்
Honda Activa-e ஸ்கூட்டரை இப்போது வீட்டிலேயே சார்ஜ் செய்யும் வகையில் புதிய வசதி விரைவில் இந்தியாவிற்கு வருகிறது.
பாரத் மோபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் அறிமுகமாகிய Honda Activa-e மொடல், இந்தியாவில் ரூ.1.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.
இதுவரை இந்த மொடலில் battery swapping வசதியே இருந்தாலும், தற்போது வீட்டிலேயே சார்ஜ் செய்யும் வசதி விரைவில் வரக்கூடும் என தெரிகிறது.
ஹோண்டா நிறுவனம் தற்போது charging dock வசதியை இந்திய Activa e வாகனத்துக்காக கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், பயனாளர்கள் தங்கள் வீடுகளிலேயே இந்த இலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய முடியும்.
இந்த டாக் சார்ஜர் ஏற்கனவே ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் Honda CUV:e மொடலில் 270W charger இருந்தது, இது 6 மணி நேரத்தில் முழு சார்ஜ் செய்ய முடிகிறது. இந்தியா வந்துள்ள Activa-e இல் தற்போது battery swapping-ஐ மட்டுமே நம்பியுள்ளது.
முன்பு ஹோண்டா, இந்திய சந்தையில் வீட்டிலே சார்ஜ் செய்வது பாதுகாப்பற்றது என தெரிவித்திருந்தாலும், battery swapping stations குறைவாக இருப்பது, தினசரி பயணிகளுக்கு சிரமமாக உள்ளது. இதனால், வீட்டில் சார்ஜ் செய்யும் dock system தற்போது தேவையானதாக மாறியுள்ளது.
இந்த புதிய வசதி வந்தால், இது இலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டாவின் மதிப்பை மேலும் உயர்த்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Honda Activa e home charging, Activa electric scooter charger, Honda EV charging dock India, Activa e charging facility, Battery swapping vs home charging, Electric scooter charging India, Honda electric scooter 2025, Activa e specs and features, EV home charging solutions India, Bharat Mobility Expo Honda Activa