2 மாற்றக்கூடிய பேட்டரிகளுடன் வரும் Honda Electric Activa.!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் முதல் மின்சார இரு சக்கர வாகனம் இரண்டு மாற்றக்கூடிய பேட்டரிகளுடன் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 27-ஆம் திகதி இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. இது Electric Activa-வாக இருக்கலாம்.
ஹோண்டா அதன் இ-ஸ்கூட்டரின் டீஸரை வெளியிட்டுள்ளது, இது இரண்டு மாற்றக்கூடிய பேட்டரிகளையும் காட்டுகிறது.
முன்னதாக வெளியிடப்பட்ட டீசரில், இரண்டு வெவ்வேறு வகையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்கள் காட்டப்பட்டன.
Activa110 ஸ்கூட்டரை போன்றே சக்திவாய்ந்த இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 104 கிமீ தூரம் வரை செல்லும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற இஐசிஎம்ஏ ஆட்டோ ஷோவில் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
விற்பனைக்கு அறிமுகமானதும், இது TVS i-Cube, Aher Rizta, Ather 450X, Bajaj Chetak மற்றும் Ola S1 வகைகளுடன் போட்டியிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Honda Electric Activa, Honda Electric scooter