மாருதி, ஹூண்டாய், டாடாவைத் தொடர்ந்து விலை உயர்வை அறிவித்த Honda
ஹோண்டா நிறுவனம் தனது கார்களின் விலையை ஜனவரி 1 உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
Maruti Suzuki, Hyundai மற்றும் Tata Motors-ஐ தொடர்ந்து, Honda Cars India-வும் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஹோண்டா கார்களின் விலை 2% அதிகரிக்கும் என்று நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் குணால் பாஹல் தெரிவித்தார்.
மேலும் இந்த புதிய விலைகள் 01 ஜனவரி 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலவு அதிகரிப்பு வாடிக்கையாளர்களை பாதிக்காது என்பதை உறுதிப்படுத்த நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக பாஹ்ல் கூறினார்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை Amaze-ன் விலை ஜனவரி நடுப்பகுதியில் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, Maruti Suzuki, Hyundai Motor India, Mahindra & Mahindra, Mercedes Benz, BMW மற்றும் Audi போன்ற பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஜனவரி 2025 முதல் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் விலை உயர்வுக்கு கிட்டத்தட்ட ஒரே காரணத்தைக் கூறுகின்றன. உள்ளீட்டு செலவுகள் மற்றும் தளவாடங்கள் அதிகரிப்பு காரணமாக ஒட்டுமொத்த உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக நிறுவனங்கள் இதுபோன்ற முடிவை எடுக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Honda, Maruti Suzuki, Hyundai Motor India, Mahindra & Mahindra, Mercedes Benz, BMW, Audi Price Hikes in 2025 January