ஹோண்டா என்எக்ஸ் 500 இந்தியாவில் அறிமுகம்: சிறப்பம்சங்கள் மற்றும் விலை
ஹோண்டா இந்தியா நிறுவனம் புதிய என்எக்ஸ் 500 சூப்பர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா என்எக்ஸ் 500
ஹோண்டா இந்தியா நிறுவனம் தன்னுடைய ஆடம்பர பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது. ஹோண்டா என்எக்ஸ் 500 பைக்கின் ஆரம்ப விலை சுமார் 5.90 லட்சம் ரூபாயாக(Ex-showroom) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் Grand Pirx Red, Matte Gunpowder Black Metallic, and Pearl Horizon White ஆகிய வண்ணங்களில் ஹோண்டா என்எக்ஸ் 500 அறிமுகமாகியுள்ளது.
அத்துடன் ஹோண்டா என்எக்ஸ் 500 பைக்கின் முன்பதிவு தற்போது இந்தியாவில் தொடங்கியுள்ளது.
சிறப்பம்சங்கள்
ஹோண்டா என்எக்ஸ் 500 அதிநவீன டிஸ்பிளே தொழில்நுட்பம் (Fully Connected Colour TFT Display)கொடுக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 17.7 லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்க் பயணத்தை நீண்ட தூரத்திற்கு நீடிக்க உதவுகிறது.
இவை அனைத்தும் ஒரு ஏரோடைனமிக் வடிவமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
சக்தி வாய்ந்த முகப்பு ஒளி அம்சம் நீண்ட தூரத்திற்கான துல்லியமான வெளிச்சத்தை வழங்குகிறது.
Engine Capacity 471 cc
Transmission 6 Speed Manual
Kerb Weight 196 kg
Fuel Tank Capacity 17.5 litres
Seat Height 830 mm
Max Power
46.9 bhp
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |