Honda கார்களுக்கு ரூ.95,500 வரை விலை குறைப்பு., GST 2.0 மாற்றத்தின் பயன்கள்
GST 2.0 மாற்றத்தின் காரணமாக, Honda கார்களுக்கு ரூ.95,500 வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Honda Cars India நிறுவனம், GST 2.0 வரி மாற்றத்தின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், தனது முக்கிய மொடல்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
2025 செப்டம்பர் 22 முதல் புதிய விலைகள் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விலை குறைப்பு ரூ.95,500 வரை இருக்கும் என Honda தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, Amaze மொடலில் அதிக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை Amaze ரூ.72,800 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
புதிய மூன்றாம் தலைமுறை Amaze ரூ.95,500 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை செடான் மொடலை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நன்மையாக அமையவுள்ளது.
மேலும், Honda Elevate SUV விலை ரூ.58,400 வரை குறைக்கப்பட்டுள்ளது. Honda City மொடலும் ரூ.57,500 வரை விலை குறைப்பு பெற்றுள்ளது.
இந்த விலை மாற்றங்ககள், மத்திய அளவிலான வகை சந்தையில் போட்டியை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Honda car price cut GST 2.0, Honda Amaze new price 2025, GST 2.0 car discounts India, Honda Elevate price drop, Honda City GST benefit, GST Council car tax reform, Affordable sedans India 2025, Compact SUV price cut Honda, Honda festive offers 2025, Car prices after GST 2.0