ஹொட்டல் சுவையில் மொறுமொறு Honey Chicken.., வீட்டிலேயே எப்படி செய்வது?
வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் இந்த சுவையான தேன் சிக்கனை விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் மொறுமொறு தேன் சிக்கன் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன்- 1 kg
- முட்டை- 2
- உப்பு- தேவையான அளவு
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் விதை- 1 ஸ்பூன்
- பூண்டு பொடி- 1 ஸ்பூன்
- மைதா- 1 கப்
- சோள மாவு- ½ கப்
- எண்ணெய்- தேவையான அளவு
- வெண்ணெய்- 2 ஸ்பூன்
- பூண்டு- 3 பல்
- சோயா சாஸ்- ½ கப்
- தக்காளி சாஸ்- ½ கப்
- தேன்- ½ கப்
- வினிகர்- 1 ஸ்பூன்
- வெள்ளை எள்ளு- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எலும்பில்லாத சிக்கன், முட்டை, உப்பு, மிளகு தூள், காய்ந்த மிளகாய் விதை, பூண்டு பொடி, மைதா, சோள மாவு சேர்த்து நனவு கலந்துகொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலில் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
இதனை தொடர்ந்து இதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், தேன், வினிகர் சேர்த்து கலந்து இதில் பொரித்த சிக்கன் சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் வெள்ளை எள்ளு தூவி கிளறி இறக்கினால் சுவையான தேன் சிக்கன் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        