நெருப்பு கோபுரமான குடியிருப்பு வளாகம்... 125 கடந்த இறப்பு எண்ணிக்கை
ஹொங்ஹொங் நகரத்தில் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை தேடல் மற்றும் மீட்புப் பணிகளை முடிப்பதாக அங்குள்ள தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
4,600 க்கும் மேற்பட்டோர்
ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் தீ விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, குறைந்தது 128 பேர்கள் மரணமடைந்துள்ளதாக கூறப்படுவதுடன் டசின் கணக்கானவர்கள் நிலை குறித்து இன்னும் தகவல் இல்லை.

வடக்கு மாவட்டமான தை போவில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகமானது தீ விபத்தில் சிக்கி, பல மணி நேரம் நெருப்பு கோபுரமாக மாறியிருந்தது. இந்த நிலையில் கடுமையாக போராடிய தீயணைப்பு வீரர்கள் பெரும்பாலும் கட்டுப்படுத்தியுள்ளனர்.
எட்டு குடியிருப்பு கோபுரங்களைக் கொண்ட இந்த வளாகத்தில் 4,600 க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். புதன்கிழமை பிற்பகல் தீ பரவத் தொடங்கியபோது பராமரிப்பு பணிகளுக்காக மூங்கில் சாரக்கட்டு மற்றும் பச்சை வலையால் மூடப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் கட்டுமான நிறுவன நிர்வாகிகள் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை, இன்னும் புகைந்து கொண்டிருந்த வளாகத்தில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே, வியாழக்கிழமை அதிகாலையில் 279 பேர் காணாமல் போனதாக பட்டியலிடப்பட்டனர், அத்துடன் 79 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு எண்ணிக்கை
மீட்புப் பணியாளர்கள், வளாகத்தின் மேல் தளங்களில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் குடியிருப்பாளர்களைச் சென்றடையப் போராடி வருகின்றனர், கடுமையான வெப்பம், அடர்ந்த புகை, இடிந்து விழும் சாரக்கட்டு மற்றும் இடிபாடுகளை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் வளாகத்தில் உள்ள இரண்டு கோபுரங்களில் காணப்பட்டனர், அதே நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் பல கட்டிடங்களில் உயிர் பிழைத்தவர்களை மீட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கை 128 ஆக உயர்ந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹொங்ஹொங்கில் சுமார் 368,000 பணியாளர்கள் உள்ளனர், இவர்களில் பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள், தங்கள் நிறுவனத்தின் சார்பில் வசிக்கின்றனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்களுக்கு உதவும் பொருட்டு, 39 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்க ஹொங்ஹொங் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் சில நிதியுதவி அளிக்கவும் முன்வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |