பிரித்தானிய குடிமகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த ஹொங்கொங்! கொடுமையானது என கண்டனம்
ஹொங்கொங்கில் ஊடக அதிபருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஊடகவியலாளர்
பிரித்தானிய குடிமகனான ஜிம்மி லாய் (Jimmy Lai) ஹொங்கொங்கின் பிரபல ஊடகவியலாளர் ஆவார். 78 வயதாகும் இவர், 2020ஆம் ஆண்டு முதன் முதலில் கைது செய்யப்பட்டார்.
அதன்பின் கடந்த ஆண்டு இறுதியில், அவர் வெளிநாட்டு சதி தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளிலும், தேசத் துரோக பிரசுரம் தொடர்பான ஒரு குற்றச்சாட்டிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பெய்ஜிங்கால் விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளிநாட்டு கூட்டு மற்றும் தேசத்துரோகக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்மி லாய்-க்கு ஹொங்கொங் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கொடுமையானது
வெளிநாட்டு சதித் திட்டங்களுக்குப் பின்னணியில் அவரே மூளையாக இருந்து செயல்பட்டார் என்பதால், லாய் மீதான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியது.
ஆனால், அவர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த நிலையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தத் தீர்ப்பை பத்திரிகை மற்றும் மனித உரிமை அமைப்புகள் "கொடுமையானது", மிகவும் அநீதியானது என்று வர்ணித்துள்ளன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |