பிரித்தானிய, பிரான்ஸ் விமானங்களுக்கு தடை! பிரபல நாடு அதிரடி நடவடிக்கை
Omicron தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக பதிவாகி வருவதால் பிரித்தானியா மற்றும் பிற 7 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு ஹொங்ஹொங் தடை விதித்துள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜனவரி 8 முதல் இரண்டு வாரங்களுக்கு ஹொங்ஹொங் அரசு தடை விதித்துள்ளது.
Omicron வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் ஒருவரின் தொடர்புகளைக் கண்டறிய ஹொங்ஹொங் அதிகாரிகள் நகரம் முழுவதும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்தது.
ஹொங்ஹொங்கில் வசிக்கும் 42 வயதான ஒரு நபர், கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் Omicron வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபராக கண்டறியப்பட்டார். அவரது தொடர்புகளில் சிலர் ராயல் கரீபியன் (RCL.N) கப்பலில் இருந்தனர், இதன் காரணமாக இந்த கப்பலின் பயணத்தை ரத்து செய்து, துறைமுகத்திற்குத் திரும்பும்படி கட்டளையிடப்பட்டது.
அரசாங்கத்தின் பூஜ்ஜிய கோவிட் கொள்கையை பராமரிக்க சமூகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஹாங்காங் தலைவர் கேரி லாம் இன்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த 8 நாடுகளிலிருந்து வரும் விமானங்களை தடை செய்வதற்கான அறிவிப்பு வெளியானது.
மேலும், நீச்சல் குளங்கள், விளையாட்டு மையங்கள், பார்கள் மற்றும் கிளப்புகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பல இடங்கள் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.
வெள்ளிக்கிழமை முதல் மாலை 6 மணிக்குப் பிறகு உட்புற உணவு தடைசெய்யப்படும், எதிர்கால பயணங்கள் ரத்து செய்யப்படும்.
ஹொங்ஹொங்கில் கடந்த 7 மாதங்களாக தொற்று பாதிப்பு இல்லாத நிலையில் கடந்த பதினைந்து நாட்களில் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.