இந்திய வம்சாவளிப்பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள கௌரவம்
இந்தியாவின் அசாம் மாநிலப் பின்னணி கொண்ட பெண்ணொருவருக்கு, பிரித்தானிய மேலவை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சவளிப்பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள கௌரவம்
இந்திய வம்சாவளியினரான ஆயிஷா (Ayesha Hazarika)வின் தந்தையான லியாகத் அலி (Liyaqat Ali Hazarika), 1960களில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர் ஆவார்.
ஊடகவியலாளர், ஒளிபரப்பாளர் மற்றும் நகைச்சுவையாளர் என பன்முகம் கொண்டவரான ஆயிஷா, இந்திய இஸ்லாமிய குடும்பத்திலிருந்து வந்தவர் ஆவார். அசாம் பின்னணி கொண்ட இந்திய வம்சாவளியினர் ஒருவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராவது இதுவே முதல் முறையாகும்.
சமூக ஊடகமான எக்ஸில் அவர் தெரிவித்துள்ள செய்தி ஒன்றில், இந்திய இஸ்லாமிய புலம்பெயர்ந்தோராக பிரித்தானியா வந்து, கடுமையாக உழைத்த எனது அருமையான பெற்றோருடன் ஒரு சிறப்பான நாளைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மேலவையில் பொறுப்பேற்பதை வாழ்நாள் கௌரவமாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ஆயிஷா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |