2 சிறுவர்களை கொட்டிக் கொன்ற 1000க்கும் மேற்பட்ட குளவிகள்: தேனீ வளர்ப்பாளர் வழங்கிய இழப்பீடு
சீனாவின் யூனானில் கொடிய குளவி தாக்கியதில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகளை தாக்கிய குளவிகள்
சீனாவின் யூனான் மாகாணத்தில் 7 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகளை குளவி கொட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இரண்டு சிறுவர்களும் பைன் மரக்காட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது குளவிகள் கூட்டத்தால் சூழப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமி 700-க்கும் மேற்பட்ட குளவிகளாலும், அவரது 7 வயது அண்ணன் 300-க்கும் மேற்பட்ட குளவிகளாலும் கொட்டுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சிறுவர்களை பாதுகாக்க முயன்ற சிறுவர்களின் பாட்டியையும் குளவிகள் கொட்டியது.
சிறுவர்களை தாக்கியது மஞ்சள் கால் குளவிகள் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேனீ வளர்ப்பாளர் மீது வழக்குப்பதிவு
இந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் தேனீ வளர்ப்பாளர் லி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, லி தனது குளவி வளர்ப்பு குறித்து உள்ளூர் வனத்துறைக்கு தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேனீ வளர்ப்பாளர் 40,000 யுவான் இழப்பீடு வழங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |