ஓடும் ரயிலில் பெண் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம்: தப்பியோடிய தாக்குதல்தாரி
சிகாகோ L ரயிலில் பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் பெண்ணுக்கு தீ வைப்பு
சிகாகோவில் CTA நீல நிற வழித்தட ரயிலில் 26 வயதுடைய பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 9.25 மணிக்கு தாக்குதல்தாரி ஒருவர், அடையாளம் தெரியாத திரவம் ஒன்றை இளம்பெண் மீது ஊற்றி பயணிகள் கண்முன்னே தீ வைத்ததாக இந்த பயங்கரமான காட்சியை நேரில் கண்ட சாட்சிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் தீ வைப்பு சம்பவத்துக்கு முன்னதாக இளம் பெண்ணுக்கும் 40 வயது மதிக்கத்தக்க தாக்குதல்தாரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாகவும் சாட்சிகள் தகவல் தெரிவித்துள்ளன.
பெண் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த நிலையில் ரயில் கிளார்க் மற்றும் லேக் நிலையத்தை அடைந்தபோது தாக்குதல்தாரி தப்பியோடியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்த சம்பவத்தை தொடர்ந்து சக பயணிகள் உடனடியாக தீயை அணைக்க முயன்றதுடன், பெண்ணுக்கு CPR அளிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர உதவியினர் பெண்ணை மீட்டு ஸ்ட்ரோகர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்ட தற்போது மோசமான தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதே சமயம் தப்பியோடிய தாக்குதல்தாரியை பிடிக்க பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் சிகாகோ காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |