உணவில் செய்த ஒரு தவறு... பாதி உடலில் புழுக்களுடன் மருத்துவமனைக்கு வந்த நபர்
தனது உணவுப் பழக்கவழக்கத்தால், இடுப்பு பகுதி முழுவதும் பயங்கர புழுக்களால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
மிக பயங்கரமான எக்ஸ்ரே
அந்த நோயாளியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு எக்ஸ்ரே எடுக்க, அதைப் பார்த்த அந்த மருத்துவர், தன் வாழ்நாளில் தான் பார்த்த மிக மோசமான எக்ஸ்ரே அது என்று கூறியுள்ளார்.
Image: X
ஆம், அந்த நபரின் இடுப்புப் பகுதி முழுவதும், நாடாப்புழுக்களின் (tapeworm) முட்டைகள் நிறைந்திருப்பதை அந்த எக்ஸ்ரேயில் காணலாம்.
Cysticercosis என அழைக்கப்படும் அந்த பிரச்சினை, taenia solium அல்லது பன்றி நாடாப்புழு என அழைக்கப்படும் நாடாப்புழுவால் உருவாகியுள்ள பிரச்சினை ஆகும்.
Image: Getty Images/Science Photo Library RF
இந்த நாடாப்புழுக்களின் cysts எனப்படும் முட்டை போன்ற அமைப்புகள், பாதிக்கப்பட்ட மனிதர்களின் இடுப்பு மற்றும் கால்களிலுள்ள தசை மற்றும் மென் திசுக்களில் சென்று அமர்ந்துவிடுகின்றன.
அவை எப்போது அந்த திசுக்களிலிருந்து மூளைக்கு பயணிக்கின்றனவோ, அப்போது நோயாளிக்கு வலிப்பு முதலான நரம்பியல் பாதிப்புகள் முதல் மரணம் வரை ஏற்படக்கூடும் என்பதுதான் பயங்கரம்.
Image: Getty Images
இந்த பிரச்சினைக்கு காரணம், சரியாக சமைக்காத அல்லது பச்சை பன்றி இறைச்சியை உண்ணுவதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |